(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
உள்ளூராட்சி வாரத்தின் ஓர் அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னெடுத்து வரும் உள்ளளூராட்சி வார நிகழ்வின் 5 ஆம் நாளில் இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம் நேற்று(19) தீகவாபி சிங்கள மகா வித்தியாலயத்தில் கௌரவ தவிசாளர் A. S. M. உவைஸ் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் R. M. R. சமன் குமார ரத்நாயக்க அவர்கள் இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எம். றியாஸ், எஸ். பாஹிமா, எம்.எல்.ஏ. சமன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்த்தர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பங்கேற்ற கௌரவ விருந்தினர்களுக்கு பாரம்பரிய முறையிலான மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.