அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முக்கிய துப்பாக்கிதாரி கேகாலை ரங்க்வல பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) இரவு நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையில் குறித்த துப்பாக்கிதாரி உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் இருப்பது விசாரணையின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் விசாரணைகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என தெரியவந்துள்ளது. மற்ற இருவர் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது டேன் பிரியசாத் கொலை வழக்கில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.