(அக்கரைப்பற்று செய்தியாளர்)
சொக்கோ நிறுவனத்தின் சர்வதேச விருது வழங்கும் விழா அக்கரைப்பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (20.09.2025) மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிறுவன பணிப்பாளர் தேசமாணி ஏ. ஜே. றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வருமான ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
விழாவில் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்த ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், பிரதேச சபை உறுப்பினர்களான எம். எல். றினாஸ், சட்டத்தரணி எம். ஏ. அன்ஸில், ஏ. சி. நியாஸ், ஏ. எல். பாயிஸ், ஐ. எல். அஸ்வர் சாலி, எஸ். எம். றியாஸ் ஆகியோர் சமூக சேவைக்கான அர்ப்பணிப்புக்காக பாராட்டுப் பெற்றனர்.
சமூக, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் பணியாற்றி வரும் தலைவர்களுக்கான இவ்விழா அவர்களை மேலும் ஊக்குவிக்கும் களமாக அமைந்திருந்தது.