(காத்தான்குடி செய்தியாளர்)
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி நேற்றிரவு புறப்பட்ட சூப்பர்லைன் பேருந்து, இன்று(21) அதிகாலை காத்தான்குடி பிரதேசத்தில் லொறியிடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் சூப்பர்லைன் பேருந்தின் பின்னால் வந்த முச்சக்கர வண்டியும் சூப்பர்லைன் பேருந்துடன் மோதி சேதமடைந்துள்ளது.
இந்த விபத்தில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பேருந்து உதவியாளர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் உயிரிழப்பு அல்லது பெரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.