Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

நாட்டின் பல இடங்களில் மழையும் பலத்த காற்றும் வீசும் அபாயம்

Posted on September 23, 2025 by Admin | 291 Views

இலங்கையின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேநேரத்தில், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

மின்னல் தாக்கங்கள் மற்றும் பலத்த காற்றால் அபாயங்கள் ஏற்படும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது