(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பதிவாளராக நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் எச்.எம்.ஏ. ஹசன் அவர்கள் நேற்று (23.09.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட சுப்ரா தரத்தில் பணியாற்றி வந்த ஹசன் அவர்கள், அரச சேவையில் நீண்டகால அனுபவம் மற்றும் திறமைகளை கொண்ட சிறந்த நிர்வாக ஆளுமையாக கருதப்படுகிறார்.
அவரது ஆற்றல், ஒழுங்குமுறை திறன் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாக முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.