இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க ராஜினாமா செய்துள்ளார்.
இந்த முடிவை அவர் நேற்று மாலை இலங்கை – பலஸ்தீன் நற்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டத்த்தில் அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த பதவியில் இருந்து விலகுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கர், அதாவுத செனவிரத்ன உள்ளிட்ட பலர் முன்னதாக இந்த சங்கத்தின் தலைவர்களாகப் பணியாற்றியமை நினைவுகூரத்தக்கது.