Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இலங்கையின் தனியார் வங்கியின் இணையதளத்தைப் போல பல போலி வலைத்தளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி பண மோசடி

Posted on September 25, 2025 by Admin | 19 Views

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போல பல போலி வலைத்தளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றி 50 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு சந்தேகநபர்களை வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு வழங்கிய ஆதாரங்களைப் பரிசீலித்த நீதிபதி, சந்தேகநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய பிற நபர்கள் இருந்தால் அவர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, சைபர் குற்றவாளிகள் குழுவொன்று திட்டமிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்ற பல போலி தளங்களை உருவாக்கி வாடிக்கையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளது.

இந்த மோசடிச் சம்பவம் நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், குற்றப்புலனாய்வுத் துறைக்கு விசாரணையை விரைவுபடுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.