(அபூ உமர்)
இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை அவர்களினால் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பவுள்ளார்.
அவரது கேள்விகளில்,
- பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலுக்கு சொந்தமான சட்டவிரோத ‘சபாத் இல்லம்’ என்ற நிறுவனம் இயங்கி வருவது குறித்து அமைச்சர் அறிவாரா?
- மேலும், அந்த நிறுவனம் எவ்வளவு காலமாக செயல்பட்டு வருகிறது, அது அமைந்துள்ள நிலம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதையும் விளக்குவாரா?
- அந்நிறுவனம் பலத்த பாதுகாப்புடன் இயங்குவதால் உள்ளூர் மக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளதை அறிவாரா?
அத்துடன்,
- இந்நிறுவனத்தை அகற்றுவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
- இதுகுறித்து பொத்துவில் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதா? இல்லையென்றால் ஏன்?
என பல்வேறு கேள்விகளை அமைச்சரிடம் இன்று முன்வைக்கவுள்ளார். இது தொடர்பாக அமைச்சரினால் வழங்கப்படவுள்ள விளக்கம் பெறும் எதிர்பார்ப்பினைப் பெற்றுள்ளது.