(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் அவர்களின்
தலைமையில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.பாயிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை -07 ம் பிரிவில் உள்ள அனைத்து வடிகான்களும் துப்பரவு செய்யும் சிரமதான நிகழ்வு நேற்று(27.09.2025) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருந்த வடிகான்கள் இன்று சுத்தமாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி தெரிவித்தனர். இத்தகைய சிரமதான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி. நியாஸ், ஐ.எல். அஸ்வர் சாலி, எஸ்.ஐ.எம்..றியாஸ், சபையின் செயலாளர் எல்.எம். இர்பான் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அப்பிரதேச பொதுமக்கள் ,சனசமுக நிலைய நிருவாகிகள் , பள்ளிவாசல் நிருவாகிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.