(அபூ உமர்)
பாராளுமன்றம் நேற்று (26.09.2025) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலியர்களின் ‘சபாத் இல்லம்’ தொடர்பாக வாய்மூல கேள்விகளை தொடுத்தார்.
அமைச்சரின் பதில்:-
சபாத் இல்லாம் அமைக்கப்பட்டிருக்கும் காணி, முஸ்லிம் ஒருவரிடமிருந்து வெளிநாட்டு பிரஜை ஒருவர் விலைக்கு பெற்றுக்கொண்டிருக்கிறார்.
தனியார் காணியில் அது அமையப்பெற்றுள்ளது என பொத்துவில் பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
04.அந்நிறுவனம் பலத்த பாதுகாப்புடன் இயங்குவதால் உள்ளூர் மக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளதை அறிவாரா?
அமைச்சரின் பதில்:-
அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிடம் மேலதிக விபரங்களை பெறலாம். மற்றைய பிரச்சினை தொடர்பாக இங்கு கேட்கப்பட்டுள்ளது அது பற்றிய அறிக்கை எனக்கு கிடைக்கப்பெறவில்லை.
அமைச்சரின் பதில்:-
ஆம். அங்கு சட்டவிரோதமான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் சட்டவிரோதமான செயற்பாடுகள் மீண்டும் நடைபெறுமானால் அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். ரெஸ்ட்டுடன்(Restaurant) தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி பெற்றுள்ளதனால் சட்டவிரோதமான மத செயற்பாடுகளை முற்றாக நிறுத்துமாறு தெளிவாக கூறியுள்ளோம். மீறினால் நீதிமன்றம் செல்வோம்.
அமைச்சரின் பதில்:-
ஆம், பொத்துவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் நேற்று கலந்து கொண்ட நமது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் உரையாற்றும்போது, இஸ்ரேல் அரசினால் காசா மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டின் அதிகாரத்தையும் செயல் துறையின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது என்று கூறினார்.
மேலும் , ஆட்சியாளர்களின் கடமை , மக்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும். பலஸ்தீன தனி நாடு கோரிக்கையை இலங்கை அரசும் ஏற்றுக் கொள்கிறது என்று கூறியதற்காக இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு உதுமாலெப்பை எம்பி நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் பலஸ்தீன தனி நாட்டு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் போது நமது நாட்டின் முக்கிய அமைச்சரான கௌரவ விமல் ரத்னநாயக்க அவர்கள் இலங்கை – பாலஸ்தீன நாடாளுமன்ற நட்புறவு சங்கம் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.
மேலும் உரையாற்றுகையில், பொத்துவில் பிரதேசத்தில் உள்ள இஸ்ரேலின் சட்ட விரோதமான கட்டடத்தை மூட வேண்டும் என பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் பொத்துவில் பிரதேச சபையிலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன் பிரதியினை இவ் உயரிய சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.
கலாசார அமைச்சராகிய நீங்கள் நீதியாக, நியாயமாக செயற்படுவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில் பிரதேசத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயலுக்கு அண்மையில் இஸ்ரேலின் இவ்விடம் அமைந்துள்ளது என்பதனை நன்கு அறிவீர்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.