ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 17வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியனாகத் திகழ்ந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்த சாம்பியன் கோப்பை வழங்கும் விழாவில் கவுன்சில் தலைவராக உள்ள பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வி கோப்பையை வழங்க அழைக்கப்பட்டார். ஆனால், அவரிடம் இருந்து கோப்பை மற்றும் பதக்கங்களைப் பெற இந்திய வீரர்கள் மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கையில் கோப்பை இல்லாமலேயே வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில் “விளையாட்டு மைதானத்திலும் Operation Sindoor போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது” என பாராட்டுத் தெரிவித்தார்.
ஏற்கனவே, Toss நிகழ்வின் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.