அரசாங்கம் LGBTIQ சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கவுள்ள சுற்றுலா பிரசாரத்துக்கு தனது எதிர்ப்பினை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இயற்கை அழகும், கலாசார பாரம்பரியமும் தானாகவே உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சக்தி கொண்டவை என்றும், சுற்றுலா மேம்பாட்டில் பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாளங்களை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
“எங்கள் சுற்றுலா வளர்ச்சி பாலியல் நோக்குநிலை அல்லது பாலின அடையாள அடிப்படையில் இருக்கக் கூடாது. எங்கள் பாரம்பரியமும், இயற்கை வளங்களும் போதுமானது. உணர்திறன் மிக்க இத்தகைய பிரச்சினைகளை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுக வேண்டும்” என்று அவர் கூறினார்.
அதேவேளை “சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நாம் பாலியல் அடையாளங்களில் கவனம் செலுத்தத் தேவையில்லை” என்றும் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.
இலங்கை அதன் கண்கவர் இயற்கை அழகு, பல்வேறு கலாசார மரபுகள் மற்றும் பண்டைய பாரம்பரியத்தினால், ஏற்கனவே நீண்ட காலமாக உலகின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.