Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

அபிவிருத்தி குறித்து கலந்துரையாடப்பட்ட இன்றைய அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on September 30, 2025 by Admin | 274 Views

(அபூ உமர்)

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (30.09.2025) அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள்ள ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம். எஸ். உதுமாலெப்பை, எம். எஸ். அப்துல் வாசித், அஷ்ரஃப் தாஹிர், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, ஏ. எம். எம். எம். ரத்வத்தே, சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், பல திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கியமான விவாதங்களில் ஈடுபட்டனர்.