மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின்படி, தரம் 11 மாணவர் ஒருவர் கையடக்கத் தொலைபேசியை பாடசாலைக்கு கொண்டு வந்ததை ஆசிரியர் விசாரித்ததிலிருந்தே மோதல் உருவாகி, அதற்கிடையில் மாணவன் ஆசிரியரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.