முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிக்க இலங்கை உயர் நீதிமன்றம் 2026 மார்ச் 25ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.
2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமுமின்றி தன்னை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி அவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மூவர் குழு இந்த மனுவை இன்று (02.10.2025) எடுத்துக் கொண்டனர்.
இதன்போது, மனு விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.