Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து- மூவர் பலி

Posted on October 5, 2025 by Admin | 175 Views

நாரம்மல – குருநாகல் வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது, குருநாகலிலிருந்து நாரம்மல நோக்கி வந்த லொறி சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலப்பக்கமாகச் சென்று, கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் லொறியில் பயணித்த சாரதி, ஆண் ஒருவர் மற்றும் பெண் ஒருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பொலன்னறுவையைச் சேர்ந்த 41, 80 மற்றும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 40 வயதுடைய பெண் மற்றும் 16, 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் காயமடைந்த நிலையில் நாரம்மல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலங்கள் இரு வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.