Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு

Posted on October 6, 2025 by Admin | 58 Views

உலக தங்கச் சந்தையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இன்று விலை பெரும் உயர்வை பதிவு செய்துள்ளது. உலகளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது அமெரிக்க டொலர் $3,945 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்றமடைந்து $50 நோக்கி நகர்கிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ₹11,060 என விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வாக பதிவு செய்யப்பட்டு,தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹88,480 (இலங்கை பெறுமதியில் ரூ.3,01,956.58) ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.3,02,240 ஆக உள்ளது. நேற்றைய விலை ரூ.3,01,680 ஆகும்.

  • ஒரு கிராம் தங்கம் – ரூ.37,780
  • ஒரு சவரன் (8 கிராம்) – ரூ.3,02,240

கடந்த ஆண்டுகளின் தங்க விலை ஒப்பீடு (அவுன்ஸ்/டொலர்)

ஆண்டுவிலை($)
20151,160
20161,250
20171,257
20181,269
20191,393
20201,770
20211,799
20221,800
20231,943
20242,405
2025 (தற்போது)3,945