வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடும் மின்னல் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிகமாக பலத்த காற்று வீசும் தருணங்களில் மழை பெய்யக்கூடும் என்பதையும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.