(குரு சிஷ்யன்)
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கோட்ட மட்ட Science Quiz போட்டி கடந்த 2025 செப்டம்பர் 23 ஆம் திகதி அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர்தர பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
மாணவர்களின் அறிவாற்றல், சிந்தனை திறன், ஆர்வம் ஆகியவற்றை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தின் இருமொழிக் கற்கைப் பிரிவு பாடசாலைகளில் இருந்து பல மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இருமொழி கற்கைப் பிரிவில் தரம் 09ல் கல்வி பயிலும் எம்.ஜே.எம்.வக்கீப் எனும் மாணவன் தனது கூர்மையான அறிவுத் திறமையால் முதலாம் இடத்தை கைப்பற்றி பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், அட்டாளைச்சேனை கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அட்டாளைச்சேனை 09ம் பிரிவைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.எல்.ஜெலீல் மற்றும் அல்முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையின் ஆசிரியர் எஸ்.எல்.சுஹைரா வீவி ஆகியோரின் புதல்வனான இம்மாணவன் பெற்றோரின் ஊக்கத்தின் காரணமாகவும் அவர் கல்வியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளார்.
இம்மாணவனை போட்டிக்கு வழிப்படுத்திய ஆசிரியர் எஸ்.ஓ.எம்.றிஸ்மி ஒஸன், கல்வியில் மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்தி வரும் அதிபர் எம்.ஐ.எம்.அஜ்மீர் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறது.
அறபா வித்தியாலயத்தின் இச்சாதனையானது அப்பாடசாலையின் கல்வித் தரத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பிற மாணவர்களுக்கும் உந்துதலான முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இம்மாணவன் எதிர்காலத்தில் கல்வியில் மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.