2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தத்தை முன்னிட்டு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) நடத்திய பொதுக்கூட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 500 பேர் தங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து கிழக்கு மாகாணத்தில் தொடங்கி அனைத்து மாகாணங்களிலும் இடம்பெற்றன. இறுதி அமர்வு மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நேற்று (08) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும் பரிசீலனை செய்து, மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது என PUCSL தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இலங்கை மின்சார சபை (CEB) சமீபத்தில் சமர்ப்பித்த முன்மொழிவில் மின்சார கட்டணங்களை 6.8 சதவீதம் உயர்த்த பரிந்துரைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.