2024 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களின் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk வழியாகப் பார்வையிடலாம்.
இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நேரம் இன்று (09) நள்ளிரவுடன் நிறைவடைகிறது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சையில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அவசரமாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.