ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்குத் துறைக்கான பிரத்தியேக அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விமான நிலையத்தின் சுற்றுப்புற காடுகளில் வசிக்கும் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் அடிக்கடி விமான நிலைய வளாகத்திற்குள் நுழைந்து அணுகல் சாலைகளைக் கடப்பது போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் விமான நிலைய உள்கட்டமைப்புகளுக்கும், விமானப் பணிகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலே, புதிதாக நிறுவப்படவுள்ள வனவிலங்கு அலுவலகம் விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், தாக்குதல்களைத் தடுப்பது, மற்றும் பயணிகள், ஊழியர்கள், விமான நிலைய வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.