நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில், மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுடன் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை நிலவும் என்றும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.