(பொத்துவில் செய்தியாளர்)
கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி (சிங்கள) தின வாசிப்பு போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவன் ஏ.முஹம்மட் ஹயான் முதலிடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
பொத்துவில் மத்திய கல்லூரியின் வரலாற்றில் இத்துறையில் மாகாண மட்ட வெற்றியைப் பதிவு செய்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவனை வழிநடத்திய ஆசிரியர்களான எஸ்.முனவ்வரா, H.D.K. கெளஸல்யா, மற்றும் மதுஸானி குணசிரி ஆகியோர்க்கு கல்வி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்பதற்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஏ.லத்தீப் அவர்களுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், இப்போட்டிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய இணைப்பாடவிதானப் பொறுப்பாளர் பிரதி அதிபர் எம்.எம். அமீனுல்லாஹ் அவர்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகின்றன.
குறித்த மாணவன் தேசிய மட்டப் போட்டியிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்.