உலகம் முழுவதும் கோடிக்கணக்கான விண்டோஸ் 10 பயனர்களை பாதிக்கும் முக்கிய அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் 10க்கு வழங்கப்பட்ட இலவச ஆதரவு இம்மாதம் அக்டோபர் 14ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த திகதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் கணினிகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகள், தொழில்நுட்ப திருத்தங்கள் மற்றும் புதிய அம்சங்கள் ஆகியவை வழங்கப்படாது. இதனால், ஆதரவு நிறைவடைந்த பிறகும் விண்டோஸ் 10 பயன்படுத்தும் சாதனங்கள் இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு வலியுறுத்துகிறது. எனினும், அனைத்து கணினிகளும் புதிய பதிப்புக்கு மேம்படுத்தும் திறன் கொண்டதாக இருக்காது.
அதனால், விண்டோஸ் 11க்கு மேம்படுத்த முடியாத பயனர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்த லினக்ஸ் அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.