காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்குச் செல்லும் நிலையில், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை உறுதி செய்து அமைதி முயற்சிகளை முன்னெடுக்க எகிப்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முன் அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்நிறுத்தம் நிலைத்திருக்கும் என்றும், காசா பிரதேசத்துக்காக விரைவில் “அமைதிக் குழு” (Board of Peace) ஒன்று அமைக்கப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
“காசா தற்போது ஒரு சிதைவுப்பகுதியை போல் மாறியுள்ளது,” என அவர் கூறியதுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் நாடுகளின் பங்களிப்பையும் பாராட்டினார்.