(சம்மாந்துறை செய்தியாளர்)
சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். ஏ. அமீர் (T.A) அவர்கள் சில காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13) கொழும்பில் காலமானார்.
மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் அவர்களின் மறைவைத் தொடர்ந்து தன் பிரதேசம் அரசியல் ரீதியாக அநாதையாகிவிடக்கூடாது என்ற நோக்குடன் தேசிய காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபையில் இரண்டு முறை உறுப்பினராக இருந்து மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.