(ஒலுவில் செய்தியாளர்)
தியகம மகிந்த ராஜபக்ஸ விளையாட்டு அரங்கில் கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் ஒலுவிலில் அமைந்துள்ள அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவன் யு. அப்துல்லாஹ் நீளம்பாய்தல் (Long Jump) போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
இது அல்-ஹம்றா கல்லூரிக்கும், ஒலுவில் மண்ணிற்கும், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த சிறப்பான சாதனையாகும்.
அப்துல்லாஹின் வெற்றிக்காக பல முயற்சிகளை எடுத்த ஆசிரியர் ஆர். நௌசாத் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ. அஸ்மத் சஹி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. போட்டிக்குத் தயார்படுத்தி நாட்டின் உயர்நிலை மேடையில் வெற்றியடைய வழிகாட்டிய அவர்களின் அர்ப்பணிப்பு அளப்பரிய முன்மாதிரியாகும்.
மேலும், மாணவனின் சாதனையில் அதிபர் அஷ்ஷேஹ் யு.கே. அப்துர் ரஹீம் நளீமி, பிரதி உதவி அதிபர்கள், ஏ.எம். கியாஸ் ஆசிரியர், வலயத் தலைவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் அனுசரணையாளர்கள் ஆகியோர் வழங்கிய ஆதரவும் பாராட்டத்தக்கதாகும்