அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நான்காவது அமர்வு இன்று (16) பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அமர்வின் ஆரம்பத்திலேயே “தெளிவு செய்தி தளம்” கடந்த மாத சபை அமர்வில் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை எதனை அடிப்படையாகக் கொண்டு தரப்படுத்தியது? என்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் சபை உறுப்பினர் கெளரவ ஏ.சி. நியாஸ் அவர்கள் உரையாற்றுகையில்,
“தெளிவு தளம் எதன் அடிப்படையில் எங்களை தரப்படுத்துகிறது? இது நியாயமற்றது. இதனை குறித்து நான் தெளிவை தெளிவுபடுத்துவேன்,”
என சபையில் தெரிவித்தார்.
கெளரவ உறுப்பினர் அவர்களே! முதலில் தெளிவடைய வேண்டியது நாம் அல்ல நீங்கள்தான்…
மாதத்திற்கு ஒரு தடவை நடைபெறுகின்ற அமர்விற்கே வருகை தராமல் , பிரேரணைகளையும் சமர்ப்பிக்காமல், மக்கள் அபிவிருத்திகளைப் பற்றி சபையில் பேசாத உங்களை தரப்படுத்தலில் முதல் நிலையில் எவ்வாறு கொண்டு வருவது?
உறுப்பினர்கள் தங்களது முகப்புத்தகத்தில் பதிவேற்றுகின்ற புகைப்படங்களை வைத்துக்கொண்டு தரப்படுத்துவதாக இருந்தால் கெளரவ உறுப்பினர் ஏ.சி.நியாஸ் அவருக்கே முதல் நிலை வழங்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.
கடந்த மாத அமர்வில் பிரேரணைகள் சமர்ப்பித்தவர்களின் விபரம்
1.கெளரவ உறுப்பினர் எஸ்.எல்.றியாஸ் – (சமர்ப்பித்தவை 08)
2.கெளரவ ஏ.எல்.பாயிஸ் – (சமர்ப்பித்தவை 07)
மற்றைய உறுப்பினர்கள் எவர்களுமே பிரேரணைகள் சமர்ப்பிக்கவில்லை.
சென்ற மாத சபை அமர்விற்கு வருகை தராதவர்களின் விபரம்
இந்நிலையில், “தெளிவு தளத்தின் தரப்படுத்தலை தான் கணக்கெடுக்கவில்லை” என கெளரவ உறுப்பினர் நியாஸ் தெரிவித்திருந்த போதிலும், சபையில் நீண்ட நேரம் அவர் அதனை குறித்தே பேசியது மற்ற உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியதாக சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தம்மை ஒரு செய்தித்தளம் தரப்படுத்துகிறது என்பதனை அறியும் ஒரு ஆளுமையுள்ள கெளரவ உறுப்பினர் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் அச்செய்தித்தளம் எவ்வாறான நியதிகளின் அடிப்படையில் தங்களை தரப்படுத்துகிறார்கள் என்பதனை அறிந்து அதற்கேற்ப தனது சபை செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அல்லது அத்தரப்படுத்தலை கணக்கெடுக்காமல் விட்டுவிட வேண்டும்.அதனை விட்டுவிட்டு தனது பலவீனத்தை மறைக்க தரப்படுத்தலே பிழை என பேசுவது கெளரவ உறுப்பினரின் ஆளுமையில் உள்ள குறைபாடா? என சிந்திக்க வேண்டியுள்ளது.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தெரிவு செய்யப்பட்டுள்ள நாம் சபையில் எழும்பி நின்று தன்னை தானே புகழ்வது என்பது தன்னிடத்தில் அரசியலில் முதிர்ச்சியின்மை என்பதனை சான்று பகிர்கிறது.
சென்ற மாத சபை அமர்வின் நிகழ்ச்சி நிரலை மக்கள் பார்வைக்காக நாம் இத்துடன் பதிவேற்றுகிறோம்.
போதுமான தெளிவுடன் நாம் தெளிவாகவே உள்ளோம்…
தெளிவில்லாதவர்கள் தெளிவடைந்து கொள்ளவும்
