அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஐந்து மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
சபையின் அறிவிப்பின்படி, ஹிங்குரான, தமண, தோட்டம, பண்ணல்கம, மதன, அக்கரைப்பற்று முதல் கல்லாறு கடலோரப் பகுதி மற்றும் இறக்காமம் உள்ளிட்ட பிரதேசங்களில் முழுமையான நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அங்கிருந்து வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தற்காலிக தடை ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் நீர் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான அளவு நீரை சேமித்துக் கொள்ளுமாறு சபை அறிவுறுத்தியுள்ளதுடன் ஏற்படும் அசௌகரியத்திற்காக வருந்தப்படுவதாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பிற்கும் புரிந்துணர்விற்கும் நன்றி தெரிவித்துள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.