இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் சேவைகளை மேம்படுத்தி, விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீர்படுத்தும் நோக்கத்துடன் இச்செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பயணிகள் தங்கள் விமான நேரத்திற்கு மூன்று (03) மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தது.