(பாலமுனை செய்தியாளர்)
குருணாகல் மாவட்ட மாணவர்களின் கல்விச் சாதனைகளை பாராட்டும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் “ASSAD Inspire Awards” வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குருணாகல் மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளையும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளையும் பெற்ற மாணவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வை கட்சியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர், ஓய்வுபெற்ற அதிபர் M.T.M. முஸம்மில் தலைமையேற்றார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்.
மேலும், குளியாப்பிட்டிய பிரதேச சபை தவிசாளர் விஜயசிறி ஏக்கநாயக்க, குருணாகல் மாநகர சபை பிரதி மேயர் அசாருடீன் மொய்னுடீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை உபதவிசாளர் இர்பான், கிரிஉல்ல கல்வி வலய தமிழ்மொழி மூலப் பணிப்பாளர் பாயிஸ், மதீனா தேசிய பாடசாலை அதிபர் ஹய்தர் அலி, கெகுணுகொல்ல தேசிய பாடசாலை அதிபர் ரிஸாட் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டு மாணவர்களின் சாதனைகளை பாராட்டினர்.

