செட்டியார் தெரு தங்கச் சந்தை தகவல்களின்படி, நேற்றைய தினம் (21) ஒரு பவுன் 22 கரட் தங்கம் ரூ.342,200 என பதிவாகியிருந்த நிலையில், இன்று (22) அது ரூ.322,000 ஆக குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுனுக்கு ரூ.20,200 வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, 24 கரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. நேற்றைய தினம் ரூ.370,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கம், இன்று ரூ.350,000 என விற்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ரூ.410,000 வரை உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, சமீபமாக தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.