2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத் திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இன்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆசிரியர்-அதிபர் சங்கங்கள், “நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேர திருத்தம் குறித்த முடிவை அரசு மாற்றவில்லை எனில் புதிய தவணை தொடங்கியவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளன.