இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (அக்டோபர் 25) சிட்னியில் நிறைவடைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், ஆஸ்திரேலியா 46.4 ஓவர்களில் 236 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவர்களில் ரென்ஷா அதிகபட்சமாக 56 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடினார்.
237 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலடி தந்த இந்திய அணி, ரோஹித் சர்மா – விராட் கோலி ஜோடியின் மாபெரும் ஆட்டத்தால் எளிதில் வெற்றி பெற்றது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களை சேர்த்து, இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ரோஹித் சர்மா 121 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 74 ஓட்டங்களுடன் அவருக்கு துணைநின்றார்.
இந்த ஆட்டத்தின் மூலம், சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ஓட்டங்களை குவித்துள்ளார். இதன்மூலம், முன்னாள் இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரின் 18,436 ஓட்டங்களை மீறி, வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற புதிய உலக சாதனையை கோலி படைத்துள்ளார்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த முன்னணி வீரர்கள்: