(சம்மாந்துறை செய்தியாளர்)
சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய மைதானத்தை செப்பனிடும் பணிகள் ரூ. 1.5 மில்லியன் செலவில் இன்று (திங்கட்கிழமை, 27.10.2025) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களால் இப்பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) சம்மாந்துறை அமைப்பாளருமான வை.பி. நபாஸ், தேசிய மக்கள் சக்தி சம்மாந்துறை மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


