(அபூ உமர்)
35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் விளையாட்டு விழா 26.10.2025ம் திகதி அட்டாளைச்சேனை இளைஞர் சம்மேளனத் தலைவர் ஏ. சி. முஹம்மத் றிப்கான் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ. எஸ். எம். உவைஸ், பிரதேச செயலாளர் ஏ. சி. அஹமத் அப்கர், மாகாண பணிப்பாளர் (சாய்ந்தமருது மாகாணக் காரியாலயம்) எச். யு. சுஸந்த, அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர்கள் திருமதி டபிள்யு. ஏ. கங்கசகரிகா மற்றும் ஏ. முபாறக் அலி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆர். எம். சிறி வர்தன, தலைமை இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஐ. பியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ. எல். பாயிஸ், தேசிய மக்கள் சக்தி கட்சியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளர் ஏ. எம். அர்பான் மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்களும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.


