Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பாலமுனை மண்ணில் சாதனை படைத்த அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணி

Posted on October 30, 2025 by Admin | 245 Views

-வாஜித் அஸ்மல்-

பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆந் திகதி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியினர்  சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர். 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பைனா அணியினர் களத்தடுப்பை தெரிவுசெய்தனர். முதலில் துடுப்பெடுத்தாடிய மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தினர் ஐந்து (05) ஓவர்களில் நிறைவில் மூன்று விக்கட்டுக்களை இழந்து 60ஓட்டங்களை பெற்றனர். 

எதிர்த்தாடிய பைனா அணியினர் 05 ஓவர்கள் நிறைவில் இரண்டு(02) விக்கட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டனர்.

 இச்சுற்றுத்தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக அன்சாரி,சிறந்த துடுப்பாட்ட வீரராக அஸ்ஜத் தொடர் ஆட்ட நாயகனாக பைனா விளையாட்டுக்கழக வீரர் நுஸ்ரி தனதாகிக்கொன்டார்
குறித்த போட்டியில் ஆட்டநாயகன் விருதினை எச்.அஸ்தக் தட்டிக்கொண்டார்.

இச்சுற்றுப் போட்டியில்
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட மார்க்ஸ்மேன் அணியினருக்கு 25ஆயிரம் ரூபா பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பைனா அணியினருக்கு 15ஆயிரம் ரூபா பணமும் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.  

குறித்த சுற்றுப்போட்டியில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இராமணாதன் சாணக்கியன் கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளர் பாறுக் நஜீ, பிரதேச சபையின் உறுப்பினர்களான சட்டத்தரனி அன்ஸில்,சிராஜ்,மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

நிகழ்வுக்கான அனுசரனையினை விளையாட்டுக்கழகத்தின் நிருவாகத்தினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.