தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாளை (31) முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த இடமாற்ற முறை இன்று (30) நடைமுறைக்கு வந்தால் அதன் விளைவாக நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் மற்றும் சுகாதார நிறுவனங்களிலும் ஏற்படக்கூடிய சேவைத் தடைகள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என GMOA எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச இந்த தகவலை வெளியிட்டார்.