அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
நேற்றிரவு சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சாதகமான பதில் கிடைத்ததையடுத்து, போராட்டத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக சங்கம் அறிவித்துள்ளது.
இதன் பேரில், இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்த பணி புறக்கணிப்பு நண்பகல் 12.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இன்று நண்பகல் 12.00 மணிக்குள் அமைச்சர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு எழுத்துமூல உறுதிப்பாடு வழங்கப்படாவிடில், பணி புறக்கணிப்பு நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் என சங்கம் எச்சரித்துள்ளது.
மருத்துவர்களின் முறையற்ற இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய அளவில் அடையாள பணி புறக்கணிப்பை இன்று தொடங்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்பே தீர்மானித்திருந்தது குறிப்பிடத்தக்கது.