மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் புதிய எரிபொருள் விலைகள் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு முக்கிய எரிபொருள் வகைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் லீற்றரின் விலை ரூபா 5.00 குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை ரூபா 294.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) லீற்றரின் விலை ரூபா. 5.00 உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை ரூபா. 318.00 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற எரிபொருள் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
விலை விவரம் (ஒரு லீற்றருக்கு):
இத்துடன், எரிபொருள் விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட உள்ளன.