நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான ஆதம்பாவா அஸ்பர் தனது கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் வகித்து வந்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் பதவியும் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபைக்கான தெரிவத்தாட்சி அலுவலர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அறிவித்துள்ளார்.