Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கணவனும் மகனும் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் பேலியகொடை என்.பி.பி பெண் உறுப்பினர் இராஜினாமா

Posted on November 6, 2025 by Admin | 180 Views

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தனது கணவரும் மகனும் சிக்கியுள்ள நிலையில் பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) சார்ந்த பெண் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா குமாரி தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிக்க என்.பி.பி அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து கடுமையான மனவருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டில் தூய்மையான அரசியல் பண்பாட்டை உருவாக்க என்.பி.பி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளதுடன் அதன் பிரதியை தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார்.