கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (06) இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் கடும் மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அந்த நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.