(அபூ உமர்)
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்களின் அன்புத் தந்தை மறைந்த அமரர் Dr. இராஜபுத்திரன் இராசமாணிக்கம் அவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். உதுமாலெப்பை அவர்கள் 08.11.2025ம் திகதி கொழும்பு பொரளை ஜயரட்ண மலர்ச்சாலைக்கு சென்று மரியாதை செலுத்தியதுடன் மறைந்தவரின் குடும்பத்தினரையும் சந்தித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

