வெளிநாடுகளில் செயல்படும் சில 18+ இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் பெரும் நிதிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் இலங்கையர்களை தவறான காணொளி தயாரிப்பில் ஈர்த்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளம் தம்பதிகள் தங்கள் அடையாளம் வெளிப்படாது என்பதிலும், வீட்டிலிருந்தே இரகசியமாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதிலும் நம்பிக்கை கொண்டதால் இவ்வழியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
ஆனால், தவறான காணொளிகளை இணையத்தில் தயாரிப்பது, பிரசாரம் செய்வது அல்லது பகிர்வது இலங்கையில் சட்டவிரோதமானது என்றும், இதில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், சில இணையதளங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றில் இலங்கையிலிருந்து பங்கேற்பது கூட குற்றவியல் சட்டத்தின் கீழ் வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில், தங்களின் சொந்த தவறான காணொளிகளை இங்கிலாந்தில் இயங்கும் பணம் செலுத்தும் வயதுவந்தோர் வலைத்தளத்தில் தமது காணொளிகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் நுகேகோடா பொலிஸார் ஒரு திருமண தம்பதியரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.