(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக எம்.ரி.எம். சியாத் அவர்கள் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.H.M. ரஸ்மி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அதிபர் பி. முஹாஜிரீன் அவர்கள் கலந்து கொண்டு தனது பொறுப்புகளை புதிய அதிபர் எம்.ரி.எம். சியாத் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இந்நியமனம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடத்திய நேர்முகத் தேர்வில் இவர் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அதே அமைச்சின் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டது.
புதிய அதிபர் எம்.ரி.எம். சியாத் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனுபவமிக்க அதிபராவார்.