2026ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவுச் செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 என்ற பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்துடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மொத்தமாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 8 பேர் வாக்கெடுப்பில் இருந்து விலகினர்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் அரசின் வரவுச் செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது கவனத்தை ஈர்த்தது. இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சி இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தேசிய மக்கள் அரசாங்கத்தின் இரண்டாவது வரவுச் செலவுத் திட்டத்தை நிதியமைச்சராக செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல நாட்களாக நடைபெற்ற விவாதங்களுக்கு பின்னர் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.