2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை நாடு முழுவதும் நவம்பர் 10 முதல் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் 5 வரை நடைபெற உள்ளது.
பரீட்சை நேர அட்டவணையின்படி சில வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்குப் பிறகும் பரீட்சைகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜும்ஆ பிரசங்கம் மற்றும் தொழுகை ஆகியவற்றை பிற்பகல் 1.00 மணிக்குள் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறும் பரீட்சை காலம் முடியும் வரை இந்த நடைமுறையை பின்பற்றுமாறும் அனைத்து கதீப்மார்களிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.